ஞாயிறு, 13 அக்டோபர், 2013

திருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்

மூலவர்:கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்
உற்சவர்:சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
அம்மன்/தாயார்:மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)
தல விருட்சம்:செவ்வாழை
தீர்த்தம்:சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
ஆகமம்/பூஜை :வைகானஸ ஆகமம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பார்கவ க்ஷேத்திரம், திருவெள்ளியங்குடி
ஊர்:திருவெள்ளியங்குடி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு








 


 

பாடியவர்கள்:
மங்களாசாசனம்

திருமங்கை ஆழ்வார்

ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே

-திருமங்கையாழ்வார்
 







 

 திருவிழா:
 
ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி
 



 

 தல சிறப்பு:
 
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
 


 

திறக்கும் நேரம்:
 

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
 

முகவரி:

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி - 612 102 தஞ்சாவூர் மாவட்டம்
























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக